விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்த சிட்டுக்குருவியைப் போலே.. இறக்கை விரித்தே இறக்கை விரித்தே வானம் ஏறி…. விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் பறத்தல் என்பது குறியீடு. மனுச பய புள்ளையான நம்முள் எல்லாருக்கும் விமானத்தில் பறத்தலே பெரும் பரவச அனுபவம், உண்மையாகவே இறக்கை முளைத்து பறக்க முடிந்தால்… ஆம் தேவதைகளாகி இறக்கை விரித்து பறந்தோமானால்…அந்த நாள் என்று வரும் என ஏக்க பெருமூச்சு விடலாம்… இல்லை இறக்கை போன்ற ஒரு செயற்கை பொருள் வைத்து பறக்கும் காலமும் வரலாம். அப்பொற்காலம் வெகுவேகமாக வரவேண்டும் என ஆசைப்படுகிறேன், உங்களைப் போலவே நானும். பறவையை கண்டான்… விமானம் படைத்தான் என்ற அளவே என்னுடைய அறிவியலறிவு… ஆனால் பறத்தல் என்பது எப்படி சாத்தியமாகிறது.. அது ஏன் ஒரு பறவைக்கு இறக்கை நீளமாகவும்.. இருங்கள் இருங்கள்… முதலில் இறகு என்பது இறக்கை என்பது வேறு என்பதும் எனக்கு புரிந்தது இப்புத்தகத்தில் தான். அதாவது இறகு என்பது பலது சேர்ந்ததுதான் இறக்கையாம்.. என்னத்தே 12 வரைக்கும் படிச்சு.. என்னத்தே அதற்கு பிறகு பிஸிக்ஸ் இளங்கலை வேற படிச்சு… அடப்போங்கப்பா.. இது தெரியலயே எனக்கு என அசிங்கமா போச்ச...