மௌனத்தின் சாட்சியங்கள் என்னும் நாவலிலிருந்து அடுத்த கட்டத்திற்கு சிறுகதை தொகுப்புடன் தோழர் சம்சுதீன் ஹீரா. முதலில் வாழ்த்துகள் தோழர். 2001-2002 காலக்கட்டத்தில் நான் உதகையிலிருந்து சனி ஞாயிறு விடுமுறைக்காக விஜயா பதிப்பகம் செல்லும்போதும் என்னை தொந்தரவு செய்தது அந்த தெரு முனையில் மணல் மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்தியபடி நின்ற அதிரடிபப்டைவீரர்களின் அந்த செக் போஸ்ட் தான். மத கலவரங்கள் நடந்து முடிந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழிந்தபின்னரும் அந்த இடைப்பட்ட காலத்தில் ஏதும் பிரச்சனைகள் இல்லாத காலத்தும் கடந்து செல்லும் ஒவ்வொருவரையும் குறுகுறு என பார்த்தப்படி நின்றிட்ட அக்காவலர்கள் பெரும்பான்மை மதத்தை சேர்ந்தவனான என்னையே தொந்தரவு செய்திடுகையில் சிறுபான்மை மதத்தினருக்கு எத்தகையதொரு கடும் அவஸ்தையாக இருந்திருக்கும்!! அந்த உளவியல் தலையீடு இருக்கிறதல்லவா அதிலிருந்து தொடங்குகிறது சிறுபான்மை மதத்தினருக்கான அவஸ்தையும், அவமானமும். இது சிறுபான்மை மதத்தினருக்கு மட்டுமல்ல, ஒடுக்கபப்ட்ட மக்களுக்கும் தான். காலம் காலமாக எங்கு குற்றம் நடந்தாலும் எந்தவித தடயமும் கிடைத்திராக காலத்தும், முகாந்திரம் ஏ...