2018ஆம்த ஆண்டின் சிறப்பு கவனம் பெற்ற சிறுகதை தொகுப்பினை கொண்டு வந்த தோழரது அடுத்த தொகுப்பு அவ்வளவாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் வந்திருக்கிறது. கடந்த தொகுப்பு ஒரு கலவர சூழலில் முளைத்திடும் கதைக் களங்களாகவே இருந்தன. மூடுண்ட சமூகமான சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்தின் அவலங்களை, அதிர வைக்கும் உண்மைகளை எளிய வார்த்தைகளில் இவரது கதைகள் வாசகருக்கு கடத்தி நின்றன. தாழிடப்பட்ட கதவுகள் தொகுப்பினை பட ித்த எவருடைய மனநிலையும் கொதித்தே போயிருக்கும். அந்த தொகுப்பினை தொடர்ந்து இந்த தொகுப்பு. முன்னுரையில் ராஜூ முருகன் சொல்வதைப் போல இவரது கதை மாந்தர்கள் அனைவருமே எளியவர்கள். எளிய மனிதர்களின் வாழ்வியல் துன்பங்கள், அவஸ்தைகள், சாதிய முரண்கள், முகம் அறியா நேச கரங்கள் என எல்லாமும் கதை களமாக்கியுள்ளார் கரீம் இயல்பாக. ”சிதார் மரங்களில்..” முத்தாய்ப்பான ஒன்று. காஷ்மீரத்து சோபியன் பகுதியில் 8 வயது ஆசீபாவின் படுபாதகமான படுகொலை அவளது குதிரையின் வாய்மொழியாக. அடுத்து ”பூ மயில்” ஒரு திரைப்படம் போல அழகாய் விரிகிறது, அதிர்ச்சியில் முடிகிறது. ஒரு கணம் உடல் சில்லிட்டு நிற்கிறது. என்ன நடந்தது என்ற விவரணை இல...