சஞ்சீவி மாமா ( இந்தியாவுக்கு நேரு மாமா … இந்த தெருவுக்கு யாரு மாமா ? ) – இப்படியான ஒரு தலைப்பு புத்தகத்திற்கு . பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் பார் சில்ரன் வெளியீடு . கொ . மா . கோ இளங்கோ என்றவுடன் தயக்கமின்றி உடனே அந்த புத்தகத்தை எடுத்தேன் . அன்று இரவே வாசிக்கத் துவங்கினேன் . சில புத்தகங்கள் மட்டுமே எடுத்தவுடன் வாசித்து முடித்தே மூடிவிட வேண்டும் என தோன்றும் . அப்படியான ஒரு புத்தகம் இது . தொடரும் சாதி ஆணவக் கொலைகள் , சாதிய படுகொலைகள் பின்னணியில் இந்த புத்தகம் ஆகச் சிறந்த வரவு . பள்ளிகளிலும் மாணவர்கள் (புதுச்சேரியில்) கையில் அவர்கள் சாதி படிநிலையை சொல்லும் கயிறினை கையில் கட்டி வரும் அவலம் இப்போதெல்லாம் தொடர் நிகழ்வாகிறது.. இந்நாவலின் காலம் அவ்வளவாக கக்கூஸ்கள் இல்லாத காலம் . தோட்டி என்பவர்களே மலம் அள்ளும் வாளிகளை தூக்கிக் கொண்டு திரிந்த காலம் . அப்படியான தோட்டியான சஞ்சீவி என்பவருக்கும் அக்கிராமத்தின் சிறிய ஹீரோ பேச்சிராசு என்பவனுக்கும் இடையேயான உறவே இந்நாவல் தோட்டி என்றவுடன் தோட்டியின் மகன் ...