புதுவையில் பாரதி புத்தகாலயம் – மாற்றுக் கல்விக்கான முதல் வாசிப்பு முகாம் 23.08.2014. அன்று ஆகஸ்ட் 23 சனிக்கிழமை. புதுவையில் முதல்முறையாக பாரதி புத்தகாலயம், புதுவை அறிவியல் இயக்கம் மற்றும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு ஒருங்கிணைந்து நடத்தும் ஆசிரியர்களுக்கான் வாசிப்பு முகாம் NKC அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி, குருசுக்குப்பத்தில் நடைபெற்றது. மதியம் 0300 மணி என்று சொல்லியிருந்தோம். உருவையாறு பள்ளி ஆசிரியர் சதீஷ், பாரதி புத்தகாலய ராம்கோபால், புதுவை அறிவியல் இயக்கத்தின் விஜயமூர்த்தி, முருகவேல், ஆசிரியர் விசாகன் என எல்லாரும் காத்திருந்தோம். நேரங்கள் கழிய கழிய ஒன்று, இரண்டு என ஆசிரியர்கள் வருகையில் நம்பிக்கையற்று நின்றிருந்த எங்களுக்கு முகாம் ஆரம்பிக்கையில் சுமார் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வந்தது நம்பிக்கையும் மகிழ்வினையும் தந்தது. ஆசிரியர் சதீஷ் தொடங்க, வரிசையாய் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்களை தாங்களே அறிமுகப்படுத்தினார்கள். விரைவில் சிறு சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவரும், பேராசிரியருமான நா. மணி அவர்கள் எழுதிய “பள்ளிக்கூட தே...