Skip to main content

Posts

Showing posts from February, 2010

சுகந்தி டீச்சரும் அண்ணா விருதும்

சுகந்தி டீச்சர், இந்தப் பெயர் சென்ற ஆண்டு (2009) டிசம்பர் மாத துவக்கத்தில் அசாத்திய தைரியத்திற்கும், கடமையுணர்ச்சியின் உச்சத்திற்கும், மிக உயர்ந்த தியாகத்திற்கும் அர்த்தம் கொடுப்பதாக தமிழ் சமூகத்தில் பலராலும் பேசப்பட்டது. அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் இந்தப் பெயர் குறித்து அவர் அவர்களுக்கே உரிய பாணியில் செய்தி வெளியிட்டது. இன்னும் தெரியாதவர்களுக்கு, சுகந்தி டீச்சர் என்பவர் 21 வயதே ஆன பெண் ஆசிரியர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் ஒன்றியம் அருகே கட்டிப்புலம் கிராமத்தின் கலைவாணி பள்ளி என்கிற தனியார் கிராமப் பள்ளியின் ஆசிரியை. இப்போது தெரிந்திருக்குமே. இன்னும் தெரியாதவர்களுக்கு, உங்கள் மேல் தப்பல்ல. உங்கள் மறதியே காரணம். வேறு ஒன்றுமல்ல. மக்களின் மறதியில்தானே பல தவறுகளும், ஊழல்களும், பெரிய குற்றங்களும், ஏன் படுகொலைகளுமே மறைக்கப்படுகின்றன, தீயர்களும், கொடும்பாவிகளும், பொய்யர்களும் தலைவர்கள் ஆகிறார்கள். இப்போதும் தெரியாதவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம். ஏனெனில், அது யாதொரு பயனும் தரப்போவதில்லை. நீங்கள் மானாட மயிலாட, டீல் நோ டீல் என் எதையும் பார்க்கலாம். இது எதற்கு? அஜய் செல்வபார