நண்பர்களே, செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி கவிஞர் புதுவை ஞானகுமாரன் என்கிற தோழர் நாகசுந்தரம் அவர்களின் மறைவினையொட்டி அவரது நண்பர்கள், தோழர்கள் பலரும் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். அதில் பேராசிரியரும் என் நண்பருமான ஹேமலதா ( 9488077788 ) அவர்களின் அஞ்சலி … அவர் நிழலில் .......... நானும், பிறரும் அடக்க, அடக்க, அடங்காமல் மேலெழும்பி மேலெழும்பி வரும் துயரம் அது. இனி என்ன்? எப்படி? என்ற பிதற்றலான கேள்விகள் வெடித்தது. அர்த்தமற்ற வெறித்த பார்வையாக மற்றவர்களுக்கு தெரிந்தது என் பார்வை. நினைவுகள் புரட்டி எடுத்தது. அவரின் நடை, பேச்சு, எழுத்துவேகம், அதிராத குரல், மென்மை, வருடும் புன்னகை, இலக்கிய பேராவல், படைப்பு சுகத்தை அனுபவிக்கும் அவரின் உவகை, அவரின் பேனா வேகம், பெரும் நட்பு வட்டம், சுழன்றடித்து சலிப்பில்லாமல் சலசலப்பில்லாமல் இயக்க பணியாற்றும் முனைப்பு, செயல் துடிப்பு, எளிமை, கல்வி பணியில் பிடிப்பு, சுற்றுச்சூழல் காக்க்கும் பொறுப்புணர்வு, தெளிவான அரசியல் ச்மூக பார்வை, மாற்றுக்கருத்தை பல சமயங்களில் வெளிப்படுத்தாமல் விழுங்கும் மௌனம், சில சமயங்களில் தன் கருத்தை மாற்றிக் கொள்...