சென்ற பதிவின் தொடர்ச்சி 6. வட இந்திய தலித் தலைவர்கள் பலரது பேச்சுக்களிலும், கட்டுரைகளிலும் தலித் மக்கள் முன்னேற்றத்திற்கு ஹிந்தி வேண்டாம்; ஆங்கிலம் தான் வேண்டும் என் கின்றனர். சமீபகாலமாக பல்வேறு அபத்த தீர்ப்புகளை சொல்லி வரும் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கர்னாடக மா நிலத்தில் தாய்மொழி வழி கல்வி அமல்படுத்த முயன்றதை குறை சொல்லியிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, வசந்தி தேவி தொடங்கிய கல்வியாளர்களும், ஜன நாயக சக்திகளும் காலம் காலமாக தாய்மொழி வழி கல்விதான் சிறந்தது என்று வாதிட்டு வருகின்றனர். அரசு அறிவித்துள்ள சமச்சீர்கல்வி இது குறித்து என்ன சொல்கிறது? தாய், தவ்தை அல்லது குடும்பத்திலிருந்து குழந்தையின் பிறப்பு முதல் கற்றுக் கொள்ளும் மொழியே தாய் மொழி. இந்தத் தாய் மொழியே சிந்தனை மொழி. இதுவே படைப்பாற்றலுக்கு ஆணிவேர். உயிரைக் கொடுத்து ஆங்கிலம் மட்டும் படிக்க வைத்தால் அவர் நல்ல வேலைக்குக்கூட செல்லலாம். நல்ல வருவாய் ஈட்டலாம். ஆனால் நல்ல மனிதனாக, குடிமகனாக இருக்க முடியாது. நல்ல "ரோபோ"வாக இயங்க முடியும். சாதியத்தால் வதைபட்டு சீரழிந்து போயுள்ள தலித் மக்கள் ரோபோக்களாக மாறினாலும...