அன்பு நண்பர்களே, வணக்கம். தமிழகம் முழுவதும் இப்போது சமச்சீர்க்கல்வி என்பது பரவலாகவும், விரிவாகவும் பேசப்படுகிறது. இருந்தாலும் சில சாதாரண கேள்விகளும் அதற்குரிய விடைகளும் காணப்படாமலேயே இருக்கிறது. ஒரு சிறு முயற்சியாக என்னுடைய சில சாதாரண கேள்விகளுக்கு தமிழ் நாடு அறிவியல் இயக்க ஈரோடு மாவட்ட செயலாளரும், பொருளாதார வல்லுனருமாகிய தோழர் ந.மணி அவர்கள் விடை சொல்லியிருக்கிறார். அவை : 1. தமிழக அரசால் மிக ஆர்பாட்டத்துடன் கொண்டு வந்திருக்கும் இந்த "சமச்சீர்கல்வி" உண்மையிலெயே சமச்சீர்கல்விதானா?" சமச்சீரான கல்வி (சமமான தரத்தில்) என்னும்போது, உயர்தரமான அவரவர்க்கு ஏற்ற அல்லது தேவையான கல்வியைக் குறிக்கப்பெறும். சமமான தரம் உருவாக்குவதும் செயற்படுத்துவதும் பாடத்திட்டம் மட்டுமல்லாது பள்ளி வசதிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கை, அவர்தம் திறமை, பாட நூல்கள், தேர்வுமுறைகள், பள்ளி நிர்வாகம், ஆகிய பள்ளிக் கல்வியின் அங்கங்கள் அவற்றின் தொடர்பான யாவற்றையும் உள்ளடக்கிய ஒரு பெரும் திட்டம் என்பதில் ஐயமில்லை. கலைத்திட்டம், நன்கு பயிற்சி ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் மாணவர் விகிதம் இவற்றுள் ஏ...