Skip to main content

Posts

Showing posts from August, 2009

முதல் ஆசிரியர்களை உருவாக்கிய முகாம்

நடுங்கும் குளிர், கான்கிரீட் கட்டடத்தின் அனைத்து ஜன்னல்களும் மூடப்பட்டிருக்கிறது. நேரம், இரவு 10.00 மணியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உள்ளே சகல குளிர்கால உடைகளோடு 18 ஆசிரியர்கள் வட்டமாக அமர்ந்து தீவிர ஆய்வு நோக்கில், தத்தமது கருத்துகளை, ஒருவர் பின் ஒருவராக, முன்வைத்து வருகின்றனர். ஒருவர், அமைதியாக நகர்ந்து என் அருகில் வந்தார். “சார், கூட்டம் முடியும் போது உறுதிமொழி ஒன்று எடுத்துக்கொள்ள விரும்புகிறோம்’’ என்றார். உறுதிமொழியின் சாரம், “புத்தக வாசிப்பு முகாம் முடிந்து, பள்ளிக்கு திரும்பியதும் என் பள்ளியில், முதல் ஆசிரியனாக முன்மாதிரி ஆசிரியனாக, ‘முதல் ஆசிரியர்’ நாவலில் வரும் துய்சேனைப் போன்ற ஆசிரியனாக விளங்குவேன் என இன்றைய நாளில் சபதமேற்கிறேன்.’’ என்பதே. 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், 12, 13 தேதிகளில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஈரோடு மாவட்டக்கிளை ஏற்பாடு செய்திருந்த புத்தக வாசிப்பு முகாமில்தான் மேற்படி உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. முகாமின் நோக்கம், கல்வி சார்ந்த நூல்களை ஆசிரியர்களுக்கு அறிமுகம் செய்வதும், மாற்றுக்கல்வி குறித்த சிந்தனையைத் தூண்டுவதுமே. முதல் நாள் இரவே எங்கள் எண்ணம் ஈடேறிய