வலைப்பூ சமூகத்தாருக்கு வணக்கமுங்கோ. நான் இதுவரை எழுதியதில்லை. எழுத முயற்சி செய்து பலதும் குப்பைத்தொட்டியோடு போயாச்சு. ஒரு தடவை கூட எழுதவேண்டும் என்று நினைத்தது முழுதாக கைகூடவில்லை. சோம்பேறித்தனமே காரணம். ஆனாலும், இந்த வலைப்பூவில் சிலதும் எழுதலாம் என்று இருக்கேன். முதலாக நான் வாசித்தவற்றில் மிகவும் பிடித்த பகுதிகளை வெளியிட்டு பின் என் சுய எழுத்தும் இருக்கும். என்னை வாசிக்க தூண்டியவர்கள் பலர். அந்த முன்னோடிகள் பலருக்கும் என் நன்றி. முதலில் என் வாசிப்பு துவங்கியது பூந்தளிர், அம்புலிமாமா, பாலமித்ரா, கோகுலம் இதில்தான். அப்பா ஒரு கம்யூனிஸ்ட் என்பதும் அவர் தொழிற்சங்க போராளி என்பதுமே என் வாசிப்புக்கு அவர் உறுதுணை செய்தது எனலாம். இன்னும்கூட பழைய நினைவுகள் இருக்கிறது. பூந்தளிர் குமுதம் இதழ் வடிவில் இருக்கும். நிறைய படக்கதை, கொஞ்சம் புதிர் என அது பிரமாதமாக இருக்கும். அதில் ஒரு கதையின் பாத்திரம் குரங்கு. சாதாரண குரங்கல்ல அது, அதன் வால் எவ்வளவு வேண்டுமானாலும் நீண்டுகொண்டே இருக்கும். வாலினை சுருட்டி அதன் மேல் உட்கார்ந்திருக்கும். எப்போதும் சிறு குழந்தைகளுக்கே உதவி செய்யும். இப்போதும் நினைவில் இருக்க...