Skip to main content

Posts

Showing posts from March, 2012

ஒரு கோழியின் கதை

ஒரு ஊரில் ஒரு கோழி தன் இடத்தில் இருந்த உணவை உண்டு இனிமையாக வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அதற்கு ஒரு தானியம் கிடைக்க, அது அதை விதைத்து பயிராக்கி உண்ணலாமே என நினைத்தது. ”ஆனால் எனக்கு இந்த தானியத்தை விதைக்க உதவுவார்கள்” என புலம்பியது கோழி. “என்னால் உதவ முடியாது, ஆனால் உனக்கு சில காபி கொட்டைகளை தருகிறேன். நீ அதை விதைத்து பணம் பண்ணுவதை விட்டுவிட்டு தானியத்தை பயிரிடுகிறேன் என்கிறாயே” என்றது வாத்து. “என்னாலும் உனக்கு உதவ முடியாது, ஆனாலும் இந்த காபி கொட்டைகள் வளர்ந்தவுடன் அதை நான் உன்னிடமிருந்து விலை கொடுத்து வாங்கி கொள்கிறேன்” என்றது பன்னி. “எனக்கும் அதே நிலைதான், என்னாலும் உதவ முடியாது, ஆனால் என்னால் உனக்கு இந்த காபி கொட்டைகளை விதைக்க பணம் தர முடியும்” என்றது பெருச்சாளி. ஆக, கோழியும் தானியத்திற்கு பதிலாக காபி கொட்டைகளை விதைத்தது. ”எல்லாம் சரி, ஆனால் எனக்கு இந்த காபி கொட்டைகளை வளர்ப்பதற்கு யாரேனும் உதவ வருவார்களா” என வினவியது கோழி. “என்னால் முடியாதுப்பா, இருப்பினும் இந்த காபி பயிர்கள் வளர என்னால் உனக்கு உரம் விற்பனை செய்ய முடியும்” என்றது வாத்து. “எனக்கு உனக்கு உதவுவது முடியாது, இருப்பினும் இந்த